×
Saravana Stores

கடல் சீற்றம் இன்றும் காணப்படும் கடல் தகவல் சேவை மையம் தகவல்

நாகர்கோவில், மே 7: தென் தமிழக கடல் பகுதியில் இன்றும் (7ம் தேதி) கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் மே 7ம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும், 0.5 முதல் 1.4 மீட்டர் உயரத்திற்கு அலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே கடற்கரை பகுதியில் செல்பவர்கள், கடலோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனை போன்று குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில கடல் பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கலெக்டர் எச்சரிக்கை
குமரி மாவட்ட கலெக்டர் தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதுடன் கடலோர பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் எவரும் கடற்கரை பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post கடல் சீற்றம் இன்றும் காணப்படும் கடல் தகவல் சேவை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Marine Information Service Center ,Nagercoil ,Indian Ocean Information Service ,South Tamil Nadu ,
× RELATED நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் ஏலம் தள்ளிவைப்பு