- மும்பை இந்தியர்கள்
- சூர்யகுமார் யாதவ்
- மும்பை
- ஐபிஎல் லீக்
- சன்ரைஸ் ஹைதராபாத்
- வான்கேடே அரங்கம்
- டிராவிஸ் ஹெட்
- அபிஷேக்
- ஹைதராபாத்...
- தின மலர்
மும்பை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் இணைந்து ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். ஹெட் அதிரடியில் ஐதராபாத் 5.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 56 ரன் எடுத்து நல்ல தொடக்கத்தை பெற்றது. அபிஷேக் 11 ரன், மயங்க் அகர்வால் 5 ரன்னில் வெளியேறினர். ஹெட் 48 ரன் (30 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), நிதிஷ் குமார் 20 ரன், கிளாஸன் 2 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஐதராபாத் 10.2 ஓவரில் 90/2 என்ற வலுவான நிலையில் இருந்து 12.1 ஓவரில் 96/5 என திடீர் சரிவை சந்தித்தது.
ஷாபாஸ் 10, யான்சென் 17 ரன் எடுத்து ஹர்திக் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அப்துல் சமத் 3 ரன் எடுத்து சாவ்லா சுழலில் மூழ்க… ஐதராபாத் 17 ஓவரில் 136 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து திணறியது. கடைசி கட்டத்தில் கேப்டன் கம்மின்ஸ் நம்பிக்கையுடன் அடித்து விளையாடி ஸ்கோரை கவுரவமான நிலைக்கு உயர்த்தினார். சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன் குவித்தது. கம்மின்ஸ் 35 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), சன்விர் சிங் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் ஹர்திக், சாவ்லா தலா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினர். பும்ரா, காம்போஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.
அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 102 ரன் (51 பந்து, 12 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். திலக் வர்மா 37 ரன், இஷாந்த் கிஷன் 9 ரன் எடுத்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் புவேனேஸ்வர் குமார், மார்கோ ஜான்சன், கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மும்பை அணி 12 போட்டியில் 4வது வெற்றியை பதிவு செய்தது.
The post 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி: சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் appeared first on Dinakaran.