×

ஜோயாலுக்காஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை முன்னிட்டு பிரத்யேக சலுகை அறிவிப்பு: பிரமாண்ட ஆபரண அணிவகுப்பு

சென்னை: இந்தியாவின் முன்னணி ஜூவல்லரி பிராண்டுகளில் ஒன்றான ஜோயாலுக்காஸ், அட்சய திருதியையை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ50,000 மற்றும் அதற்கு மேல் வைரங்கள், அன்கட் வைரங்கள் மற்றும் பிரஷ்யஸ் நகைகளை வாங்கினால் ரூ2,000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர்களை தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசாக அளிக்கிறது. ரூ50,000 மற்றும் அதற்கு மேல் தங்க நகைகளை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் ரூ1,000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சரை பெறுவார்கள். ரூ10,000 மதிப்புள்ள வெள்ளி நகைகளை வாங்கினால் ரூ500 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் கிடைக்கும். மே மாதம் 12ம் தேதி வரை இந்தியாவில் உள்ள அனைத்து ஜோயாலுக்காஸ் ஷோரூம்களிலும் இந்த விழாக்கால சலுகையை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.

இந்த அட்சய திருதியையின் போது வாடிக்கையாளர்கள் வித விதமான கலெக்ஷன்களை தேர்ந்தெடுக்க ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனித்துவமான டிசைன்களைக் கொண்டுள்ள பிரமாண்ட ஆபரண அணிவகுப்புடன் ஜோயாலுக்காஸ்-ம் தனித்துவமான தனது பிராண்டின் புதிய டிசைன்களை வடிவமைத்துள்ளது. இந்த விசேஷ விழாக்கால சலுகை குறித்து ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், “இந்த அட்சய திருதியையின் மங்களகரமான சந்தர்ப்பத்தில், இந்த சலுகைகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,’’ என்றார்.

The post ஜோயாலுக்காஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை முன்னிட்டு பிரத்யேக சலுகை அறிவிப்பு: பிரமாண்ட ஆபரண அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Joyalukas ,Akshaya ,Trithi ,Grand Jewelery Parade ,CHENNAI ,India ,Thritiyai ,Akshaya Trithi ,Dinakaran ,
× RELATED திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டிய விதிமுறை