×

சாலையில் நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்ற வாலிபர் நிலை தடுமாறி விழுந்து பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சாலையில் நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்ற வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமம், பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது, மகன் சந்தோஷ் (24). காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

வழக்கம்போல், நேற்று முன்தினம் பணிக்கு சென்ற சந்தோஷ், வேலைமுடித்து தனது பைக்கில் ஏனாத்தூரிலிருந்து சிறுவாக்கம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்ற சந்தோஷ், நிலைதடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்திற்குள்ளானார். விபத்தில் பலத்த காயம் அடைந்தவரை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு ஏனாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்தும், தனியார் மருத்துவமனைக்கு சென்ற காஞ்சிபுரம் தாலுகா போலீசார், சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சாலையில் நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்ற வாலிபர் நிலை தடுமாறி விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Venkatesan ,Perumal Koil Street, Siruvakkam village ,Santosh ,Kanchipuram… ,
× RELATED மதுரையில் திமுக கூட்டணியில்...