×

மக்களவை 3ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு: பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் வாக்களிக்கிறார்கள்

புதுடெல்லி: மக்களவை 3ம் கட்ட தேர்தலில் இன்று 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அகமதாபாத்தில் இன்று ஓட்டுப்போடுகிறார்கள். நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 7 கட்டமாக நடக்கும் இந்த தேர்தலில் முதற்கட்டமாக ஏப்.19ல் 102 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக ஏப்.26ல் 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. 3ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.

10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. கர்நாடகாவில் 14, குஜராத்தில் 25, மகாராஷ்டிராவில் 11, உபியில் 10, மபி 9, சட்டீஸ்கரில் 7, பீகாரில் 5, அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தத்ராநாகர்ஹவேலி, டாமன் டையூ தலா 1 இடங்களில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. குஜராத் மாநிலம்பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம். காந்திநகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுகிறார். இன்று தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் காந்திநகர் தொகுதி அமைந்து இருக்கும் அகமதாபாத்தில் உள்ள பூத்களில் ஓட்டுப்போட உள்ளனர்.

இதற்காக அவர்கள் நேற்று இரவு குஜராத் சென்றனர், மேலும் ஒன்றிய அமைச்சர்கள் ஜோதிராதித்யா சிந்தியா(குணா தொகுதி), மன்சுக் மாண்டவியா(போர்பந்தர், புருஷோத்தம் ரூபாலா(ராஜ்காட்), பிரகலாத் ஜோஷி(தார்வாட்), எஸ்பி சிங் பாகெல்(ஆக்ரா) ஆகியோரும் வேட்பாளராக களத்தில் உள்ளனர். மேலும் மபி முன்னாள் முதல்வர்கள் சிவராஜ்சிங்சவுகான்(விதிஷா), திக்விஜய்சிங்(ராஜ்கார்க்), பசவராஜ் பொம்மை( ஹவேரி), சரத்பவார் மகள் சுப்ரியா சுலே(பாராமதி), அகிலேஷ்யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் (மெயின்புரி) ஆகியோரும் முக்கிய வேட்பாளராக உள்ளனர். 120 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 11 கோடி பேர் இன்று வாக்களிக்க உள்ளனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜ வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
* 3ம் கட்டமாக இன்று நடக்கும் தேர்தலுடன் 283 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவுக்கு வருகிறது.
* மே 13ல் 4ம் கட்டம், மே 20ல் 5ம் கட்டம், மே 25ல் 6ம் கட்டம், ஜூன் 1ல் 7ம் கட்டமாக தேர்தல் நடக்கிறது.

The post மக்களவை 3ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு: பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் வாக்களிக்கிறார்கள் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha 3rd phase election ,PM Modi ,Minister Amit Shah ,Ahmedabad ,New Delhi ,Lok Sabha elections ,Modi ,Home Minister ,Amit Shah ,18th Lok Sabha Election ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவைக்கான 3-ம் கட்ட தேர்தல்; மாலை 5 மணி நிலவரம்: 60.19% வாக்குகள் பதிவு!