×

மகாலட்சுமி திட்டம் குறித்த 40 லட்சம் துண்டு பிரசுரங்கள் விநியோகம்: காங்கிரஸ் தகவல்

புதுடெல்லி: பெண்களுக்கான மகாலட்சுமி திட்டம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த 40 லட்சம் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 18வது மக்களவைக்கான 6ம் கட்ட தேர்தல் வரும் 25ம் தேதியும், 7 மற்றும் கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் வௌியிட்ட தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காணொலி ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில், “விலைவாசி உயர்வால் பெண்கள் கடும் நெருக்கடியான சூழலில் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த மகாலட்சுமி திட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் ஏழை பெண்களுக்கு வருடம்தோறும் ரூ.1 லட்சம் தரப்படும். இந்த தொகை பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். மகாலட்சுமி திட்டத்தின் பயன்கள் குறித்து பெண்களுக்கு விளக்கும் விதமாக 6,7ம் கட்ட தேர்தலுக்கு முன் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே நேற்று முன்தினம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கோடிக்கணக்கான லட்சாதிபதிகள் உருவாக்கப்படுவார்கள். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்த குடும்பத்தில் இருந்து ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்” என்று உறுதி அளித்தார்.

The post மகாலட்சுமி திட்டம் குறித்த 40 லட்சம் துண்டு பிரசுரங்கள் விநியோகம்: காங்கிரஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Congress ,NEW DELHI ,18th Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை...