- T20 உலக கோப்பை
- ஐசிசி
- துபாய்
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
- மேற்கிந்திய தீவுகள்
- ஐக்கிய மாநிலங்கள்
- தின மலர்
துபாய்: வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்த உள்ள ஆண்கள் டி20 உலக கோப்பை தொடரின்போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உறுதி அளித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை டி20 தொடர், ஜூன் 2ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றில் பங்கேற்கத் தகுதி பெறும். அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 27, இறுதிப் போட்டி ஜூன் 29ல் நடைபெறும்.
இந்த நிலையில், உலக கோப்பை தொடரின்போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக டிரினிடாட் & டுபாகோ பிரதமர் கெய்த் ரோவ்லி தெரிவித்துள்ளார். இதையடுத்து, உலக கோப்பை தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று ஐசிசி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தரப்பில் கூட்டறிக்கை வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீசில் 6 மைதானங்களிலும், அமெரிக்காவில் 3 மைதானங்களிலும் உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.
The post டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத அச்சுறுத்தல்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ஐசிசி உறுதி appeared first on Dinakaran.