×

கேரள முதல்வர் வெளிநாடு பயணம்


திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அதிகாலை கொச்சியில் இருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி கமலா விஜயனும் சென்றுள்ளார். இது அரசு முறைப் பயணம் அல்ல என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் துபாய் சென்றதாகவும் கூறப்படுகிறது. எத்தனை நாட்கள் 2 பேரும் துபாயில் தங்கி இருப்பார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. வெளிநாடு செல்வது ஏன்?: பினராயி விஜயன் எதற்காக வெளிநாடு செல்கிறார் என்பது குறித்து கூற வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி கே. முரளீதரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது: பினராயி விஜயன் கேரளாவின் ஆட்சித் தலைவர் ஆவார். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ரகசியம் கூடாது. அவர் துபாய் உள்பட 3 நாடுகளுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். அவர் அரசு முறைப் பயணமாக செல்ல வில்லை. எதற்காக இந்த நாடுகளுக்கு தனிப்பட்ட முறையில் செல்கிறார் என்பதை கூற வேண்டும். இவ்வாறு முரளீதரன் கூறினார்.

The post கேரள முதல்வர் வெளிநாடு பயணம் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Dubai ,Kochi ,Kamala Vijayan ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!