×
Saravana Stores

கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துக்கான ரெட் அலர்ட் இன்னும் விலக்கப்படவில்லை: மாவட்ட ஆட்சியர் பேட்டி

கன்னியாகுமரி: கள்ளக்கடல் எனும் அதீத கடல் சீற்றத்துக்கான ரெட் அலர்ட் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்னும் நீடிக்கிறது என்று ஆட்சியர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்துக்கு விடுக்கப்பட்ட கடல் சீற்றத்துக்கான ரெட் அலர்ட் இன்னும் விலக்கப்படவில்லை என்று கன்னியாகுமரி ஆட்சியர் பேட்டி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி அருகே கணபதிபுரத்தில் கடலில் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த 12 மாணவர்கள், குமரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பின்னர் லெமூர் கடற்கரையில் குளித்து மகிழ்ந்துள்ளனர். அப்போது திடீரென கடலில் குளித்த மாணவர்களில் 6 பேரை அலை இழுத்துச் சென்றது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரில் ஒருவர் பரிதமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் லெமூர் பகுதியில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் ஸ்ரீர் பேட்டி அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளோம். கடலோர காவல்படை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை, சுற்றுலாத்துறை என சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு ஆட்சியர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் பேரிடர் மீட்பு படையினரும் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

 

 

The post கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துக்கான ரெட் அலர்ட் இன்னும் விலக்கப்படவில்லை: மாவட்ட ஆட்சியர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Ruler ,Black Sea Rage ,Kanniyakumari ,
× RELATED கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு பீம்கள் பொருத்தும் பணி தொடக்கம்