×

அரைகுறை ஆடைகளுடன் ‘ப(ம)ப்’பில் விடிய விடிய ஆபாச நடனம் ஐதராபாத்தில் 75 இளம்பெண்கள் சிக்கினர்

திருமலை: ஐதராபாத்தில் உள்ள பப்பில் போதையில் அரைகுறை ஆடைகளுடன் விடிய விடிய ஆபாச நடனம் நடந்தது. இதில் பங்கேற்ற 75 இளம்பெண்கள், 32 இளைஞர்கள் பிடிபட்டனர். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியார் பப் செயல்பட்டு வருகிறது. இங்கு சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெறுவதாகவும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வெளி மாநிலங்களில் இருந்து இளம்பெண்களை வரவழைத்து தினமும் விடிய விடிய மதுபோதையில் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நள்ளிரவில் அந்த பப்பில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு குடிபோதையில் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனமாடிக் கொண்டிருந்த 75 இளம்பெண்கள், 32 இளைஞர்கள் உள்பட 167 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பப்பில் எந்த வகை போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது, இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிடிபட்ட இளம்பெண்களின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் அளித்து வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் அறிவுரை கூறி பெண்களை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

The post அரைகுறை ஆடைகளுடன் ‘ப(ம)ப்’பில் விடிய விடிய ஆபாச நடனம் ஐதராபாத்தில் 75 இளம்பெண்கள் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Panjara Hills ,Telangana ,
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...