கோவை: யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு அளித்துள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4ம் தேதி தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கரை வருகின்ற 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த சூழலில் வழக்கு தொடர்பாக மேல் விசாரணைக்காக கோவை சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபிறகு, நீதிமன்றம் சவுக்கு சங்கரை எத்தனை நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்கும் என்பது தெரியவரும்.
தனியார் யூ-டியூபர் சேனலுக்கு சவுக்கு சங்கர் கொடுத்த நேர்காணலில் காவல்துறை அதிகாரிகள் பற்றி பேசியிருந்தார். அது எந்த ஆதாரத்தில் பேசப்பட்டது? அதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!! appeared first on Dinakaran.