×
Saravana Stores

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: தொடர் ஓட்டத்தில் விளையாட இந்திய மகளிர், ஆடவர் அணி தகுதி பெற்றது

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடர் ஓட்டத்தில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்துக்கான இந்திய மகளிர், ஆடவர் அணி பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது. ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த தடகள் வீரர்கள் ஆரோக்கிய ராஜிவ், சுபா வெங்கடேசன் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பெண்களுக்கான 4X400 மீட்டர் பிரிவில், ரூபால் சவுத்ரி, எம்.ஆர்.பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ தண்டி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 29.35 வினாடிகளில் கடந்து 2-வது இடத்தை பிடித்தது. ஜமைக்காவை சேர்ந்த அணி 3 நிமிடங்கள் 28.54 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தது.

ஆண்களுக்கான 4X400 மீட்டர் பிரிவில், முகமது அனஸ் யாஹியா, முகமது அஜ்மல், ஆரோக்கிய ராஜீவ் மற்றும் அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 3 நிமிடங்கள் மற்றும் 3.23 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 2-வது இடத்தை பிடித்தது. அமெரிக்க அணி 2 நிமிடங்கள் 59.95 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தது. ஆண்கள் அணியில் ஆரோக்கிய ராஜ் மற்றும் பெண்கள் அணியில் இடம்பெற்றுள்ள சுபா வெங்கடேசன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

The post பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: தொடர் ஓட்டத்தில் விளையாட இந்திய மகளிர், ஆடவர் அணி தகுதி பெற்றது appeared first on Dinakaran.

Tags : Paris Olympics ,Olympics ,women's ,men's ,Dinakaran ,
× RELATED செஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம்...