×

கடல் கொந்தளிப்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

மயிலாடுதுறை, மே 6:கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எஸ்பி மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையின் வேண்டுகோள் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய காற்று வீசக்கூடும், கடல் கொந்தளிப்புடன் 1.5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை எழக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். கரையோரம் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கடலுக்குள் பொதுமக்கள் யாரும் குளிக்க செல்ல வேண்டாம்.

காற்றின் வேகத்தால் படகுகள் சேதமடையக்கூடும் என்பதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறும், தாழ்வான பகுதிகளில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எஸ்பி மீனா தெரிவித்தார்.

The post கடல் கொந்தளிப்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthura ,SP ,Meena ,Mayiladudhara District Police Department for Fishermen ,Public ,Indian Meteorological Survey Centre ,Tamil Nadu ,
× RELATED மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர்...