×

சிறுமுகையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

 

மேட்டுப்பாளையம், மே 6: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக கோவையில் கத்திரி வெயிலின் தாக்கத்தால் முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தாகத்தை தணிக்கும் வகையில் பொது இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அந்த வகையில் சிறுமுகை பேரூர் மற்றும் ஒன்றிய திமுக சார்பில் காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் தலைமையில் நேற்று தியேட்டர் மேடு பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார் முன்னிலை வகித்தார்.

கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர்,ஜூஸ், தர்பூசணி,திராட்சை உள்ளிட்டவற்றை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் நவீன், சிறுமுகை பேரூராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

The post சிறுமுகையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ne Mor ,DMK ,Sirumug ,Mettupalayam ,Tamil Nadu ,Coimbatore ,Buttermilk Panthal ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு