×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 2238 மாணவர்கள்

 

காஞ்சிபுரம், மே 6: நாடு முழுவதும் 2024-25ம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை தேர்வு நடக்கிறது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் குருஷேத்திரப் பள்ளியில் 318 மாணவ மாணவிகள் தேர்வெழுத்துகின்றனர்.

இதைத்தொடர்ந்து சுங்குவார்சத்திரம் மகரிஷி இன்டர்நேஷனல் உண்டு உறைவிட பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் குன்னூர் கிராமத்தில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியிலும் தலா 960 மாணவ மாணவிகள் என 2238 தேர்வு எழுதினார்கள். மாணவ மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன .ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டைகள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. நீட் தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 2238 மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram district ,Kanchipuram ,Tamil Nadu ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...