×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 3 மையங்களில் நீட் தேர்வு 1,584 பேர் எழுதுகின்றனர்

நாகப்பட்டினம், மே 5: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 தேர்வு மையங்களில் இன்று ஆயிரத்து 584 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். மருத்துவ படிப்பிற்கு தேவையான நுழைவுத்தேர்வு அதாவது நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு ஆயிரத்து 584 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி, சின்மயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அமிர்தவித்யாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் 720 பேரும், சின்மயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 456 பேரும், அமிர்தவித்யாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 408 பேரும் தேர்வு எழுதவுள்ளனர்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 3 மையங்களில் நீட் தேர்வு 1,584 பேர் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15,491 தேர்வாளர்கள் குரூப்-4 தேர்வு எழுதினர்