×

மனைவியை கத்தியால் குத்தி கொன்று கணவர் தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம், தாயுமானவர் சுவாமி தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (47). கொத்தனார். இவரது மனைவி சரண்யா(38). தம்பதியினரிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பன்னீர்செல்வம், சரண்யாவை பிரிந்து தனியாக வாழ்ந்துள்ளார்.

நேற்று அதிகாலை சரண்யா, பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு சென்ற பன்னீர்செல்வம், சரண்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சரண்யாவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பிறகு அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post மனைவியை கத்தியால் குத்தி கொன்று கணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Panneerselvam ,Swamy Street, Ramanathapuram ,Mason ,Saranya ,
× RELATED வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு