தவங்கரே: கர்நாடக மாநிலம் தவங்கரேவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “பாஜ தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வந்து அதன் மூலம் நன்கொடை வாங்கினார்கள். குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து பல உயிரை பலி வாங்கியது. அந்த பாலத்தின் மறுகட்டுமான பணிக்கு ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து பாஜ நன்கொடை வாங்கியது. கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட இளைஞர்களுக்கு மாரடைப்பு வந்து இறக்கிறார்கள். இந்த தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனம் பாஜவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் ரூ.52 கோடி நன்கொடை தந்துள்ளது.
உண்மை என்னவென்றால் பாஜதேர்தல் பத்திர நன்கொடை மூலமாகவோ, ஈடி சோதனைகளை செய்தோ அல்லது ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்தோ நன்கொடை வந்த பின் அதை திரும்ப பெற்றுள்ளது. பாஜ ஊழலில் திளைத்தது என்பதே உண்மை” என்று காட்டமாக குற்றம்சாட்டினார்.
The post பாஜவுக்கு ₹52 கோடி நன்கொடை கொடுத்த சீரம் கொரோனா தடுப்பூசிகளால் இளைஞர்களுக்கு மாரடைப்பு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.