×
Saravana Stores

வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்த இடஒதுக்கீடு சலுகைகளை பறிக்க காங். விரும்புகிறது: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

போபால்: காங்கிரஸ் வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்த இடஒதுக்கீடு சலுகைகளை பறிக்க முயற்சிக்கிறது என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டி உள்ளார். மத்தியபிரதேசத்தின் குணா மக்களவை தொகுதிக்கு வரும் 7ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு பாஜ வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிடுகிறார். அசோக் நகர் பகுதியில் நடந்த பிரசார பேரணியில் சிந்தியாவுக்கு ஆதரவாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய ஆதித்யநாத், “ காங்கிரஸ் தன் வாக்கு வங்கியை திருப்திப்படுத்துவதற்காக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் செய்ததுபோல், தலித், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சலுகைகளை பறித்து அதை முஸ்லிம்களுக்கு கொடுக்க முயற்சிக்கிறது. 2014ம் ஆண்டுக்கு முன் தீவிரவாதமும், நக்சலிசமும் உச்சத்தில் இருந்தன. இப்போது அது ஒடுக்கப்பட்டுள்ளது. இது புதிய இந்தியா” என்று தெரிவித்தார்.

The post வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்த இடஒதுக்கீடு சலுகைகளை பறிக்க காங். விரும்புகிறது: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Yogi Adityanath ,Bhopal ,Uttar Pradesh ,Chief Minister ,Madhya Pradesh ,Guna Lok Sabha ,BJP ,Dinakaran ,
× RELATED சிவராஜ்சிங் சவுகான் மகன் மிரட்டல்...