×

ஆர்எல்டி பிரமுகர் கட்சிக்கு முழுக்கு

மீரட்: உபி, பாஜ எம்பி பிரிஜ்பூஷன் சரண் சிங் குத்துசண்டை வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டி குத்து சண்டை வீராரங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பிரிஜ் பூஷனுக்கு மீண்டும் தேர்தலில் சீட் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இறுதியில் கடந்த வியாழனன்று பிரிஜ்பூஷனின் மகன் கரண் பூஷனுக்கு கைசர்கஞ்ச்சில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாஜ அறிவித்தது.

பாஜவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் கூட்டணி கட்சி ஆர்எல்டியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரோகித் ஜாக்கர் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். இவர் தேசிய ஜாட் சம்மேளன மாநில தலைவராகவும் உள்ளார்.

The post ஆர்எல்டி பிரமுகர் கட்சிக்கு முழுக்கு appeared first on Dinakaran.

Tags : RLD ,UP ,BJP ,Brijbhushan ,Charan Singh ,Brij Bhushan ,
× RELATED பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில்...