×

இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது நியாயமற்றது: முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கருத்து

இந்தூர்: மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்‌ஷய்காந்தி பாம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளன்று திடீரென அவர் தனது மனுவை வாபஸ் பெற்றார். பின்னர் அவர் பாஜவில் இணைந்தார்.

இது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் மற்றும் முன்னாள் பாஜ எம்பியான சுமித்ரா மகாஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது; பிரதான எதிர்கட்சியின் வேட்பாளர் இந்தூரில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றது குறித்து அறிந்து ஆச்சரியமடைந்தேன். இது நடந்திருக்க கூடாது. இந்தூரில் யாராலும் பாஜவை தோற்கடிக்க முடியாது. காங்கிரஸ் வேட்பாளர் இதுபோன்று செய்திருக்க கூடாது. ஒருவகையில் அவர் தனது கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டார். உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. நமது கட்சியினர் இவ்வாறு செய்திருந்தால் அது தவறு. காங்கிரஸ் வேட்பாளர் தாமாக அதனை செய்திருந்தாலும் கூட அதுபோன்று செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது நியாயமற்றது: முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கருத்து appeared first on Dinakaran.

Tags : Indore ,Congress ,Former Speaker ,Sumitra Mahajan ,Akshay Gandhi Bam ,Indore Lok Sabha ,Madhya Pradesh ,
× RELATED சூதாடிய 12 பேர் கைது ₹23 ஆயிரம் பறிமுதல்