×

ஸ்ரீவில்லி. ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது

ஸ்ரீவில்லிபுத்தூர்: சித்திரை மாத ரேவதி நட்சத்திர நாள் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் அவதார தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் நடைபெறும். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களை அணிந்து கொண்டு தேரில் பக்தர்களுக்கு ரங்கநாதர் காட்சியளிப்பார். இந்த ஆண்டில் நாளை (மே 6) ரங்கநாதர் அவதார தினத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது.

இதற்காக ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரங்களை திருச்சிக்கு கொண்டு செல்லும் வைபவம் நேற்று நடைபெற்றது. நேற்று ஏகாதசி என்பதால் கண்ணாடி மாளிகையில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஆண்டாள் – ரெங்கமன்னாருக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டன. சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பட்டு வஸ்திரங்கள் ஸ்ரீரங்கத்திற்கு கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

The post ஸ்ரீவில்லி. ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது appeared first on Dinakaran.

Tags : Srivilli ,Andal ,Srirangam ,Srivilliputhur ,Revathi Nakshatra ,Chitrai ,Trichy Srirangam Ranganatha ,Ranganatha ,Dinakaran ,
× RELATED ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படித்துறையில்...