×

மாணவர் நலனில் அக்கறை கொண்டு சீரிய முறையில் செயல்படும் திராவிட மாடல் அரசு: ஜவாஹிருல்லா புகழாரம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட 6ம் வகுப்பு கணக்கு பாடத்தில் மூன்றாம் பருவத்தின் தொகுதி இரண்டாவது புத்தகத்தில் இயல் இரண்டில் முழுக்கள் எனும் தலைப்பில் ஆன பாடம் சீட்டுக்கட்டு முறையை மாணவர்களிடையே அறிமுகப்படுத்துவது ஏற்புடையது அல்ல என்று பதிவிட்டிருந்தேன்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2021ல் இப்பாடம் திருத்தி அமைக்கப்பட்டது என்றும் திருத்திய பாடத்தின் பக்கங்களையும் அனுப்பியுள்ளார். தவறான பதிவைச் செய்தமைக்கு மனப்பூர்வமாக வருந்துகிறேன். மாணவர் நலனில் அக்கறை கொண்டு சீரிய முறையில் செயல்படும் திராவிட மாடல் அரசிற்கு என் நன்றி.

The post மாணவர் நலனில் அக்கறை கொண்டு சீரிய முறையில் செயல்படும் திராவிட மாடல் அரசு: ஜவாஹிருல்லா புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Dravidian ,Jawahirullah Pugaharam ,Chennai ,Humanist People's Party ,President ,Prof. ,MH Jawahirullah ,Department of School Education ,Jawaharlal Nehru ,
× RELATED ஆதி திராவிடர், பழங்குடியினர் பள்ளி,...