×

தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.920 குறைந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களில் சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. இப்படியே உயர்ந்து ஏப்ரல் 19ம் தேதி சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது.

இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்தது. நேற்றும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,600க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.52,800க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது தெரியவரும்.

The post தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.920 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Savaran ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 11 சவரன், பிளாட்டினம் திருட்டு