- மயங்க் யாதவ்
- பயிற்சியாளர்
- லாங்கர்
- லக்னோ
- ஐபிஎல்
- லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ்
- ஜஸ்டின் லாங்கர்
- தில்லி
- தின மலர்
லக்னோ: ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக விளையாட மாட்டார் என் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த இளம் வேகப் பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் (21 வயது), நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் பந்துவீசி மிரட்டிய மயங்க், தேர்வுக் குழுவினர் உள்பட அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். எனினும், அடுத்தடுத்து ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவதிப்பட்டு வரும் மயங்க் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் லேங்கர் கூறுகையில், ‘மயங்க் யாதவுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஏற்கனவே காயம் அடைந்த பகுதியில் சிறிய அளவில் மீண்டும் தசை கிழிந்துள்ளது தெரியவந்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எஞ்சியுள்ள போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் இப்படி காயம் அடைவது வாடிக்கையான ஒன்று தான். மயங்க் அதிலிருந்து மீண்டு, விரைவில் களத்துக்கு திரும்புவார் என நம்புகிறேன்’ என்றார். காயத்தால் அவதிப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர் தீபக் சாகரும் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ் விளையாடமாட்டார்: பயிற்சியாளர் லேங்கர் தகவல் appeared first on Dinakaran.