இஸ்லாமாபாத்: உலகளவில் பிரலமான யோகாவை பாகிஸ்தான் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. பண்டைய இந்தியாவின் உடல், மனம், ஆன்மீக பயிற்சி முறையான யோகாவை அங்கீகரிக்கும் விதமாக ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா கடந்த 2014 டிசம்பர் மாதம் அறிவித்தது. அதிலிருந்து உலகில் 175க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ஆனால் அண்டை நாடான பாகிஸ்தான் அரசு யோகாவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், முதல் முறையாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் தலைநகர் மேம்பாட்டு ஆணையம் (சிடிஏ) யோகாவை அறிமுகப்படுத்தி உள்ளது.
The post பாகிஸ்தானில் யோகா அதிகாரப்பூர்வ அறிமுகம் appeared first on Dinakaran.