- கிழக்கு மாவட்ட காங்க
- ஜெயகுமார் தனசிங்
- நெல்லா
- காங்கிரஸ்
- நெலு
- கே
- கரைச்சுட்டு
- புதூர்
- ஆ.
- ஜெயக்குமார்
- ஜனாதிபதி
நெல்லை: காணாமல் போன காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரைச்சுத்து புதூரைச் சேர்ந்த கே.பி.கே. ஜெயக்குமார் 2ம் தேதி முதல் காணவில்லை என்று மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர், வீடு திரும்பவில்லை என கருத்தையா புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரைச்சுத்து புதூரில் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொலையா? தற்கொலையா ? என்ற கோணத்தில் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கடந்த மாதம் 30ம் தேதி நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நெல்லைக்கு செல்கிறார். இதுகிறித்து பேசிய அவர், நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினேன். ராகுல்காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார். காவல்துறை சுதந்திரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். கட்சி ரீதியாகவும் இதுதொடர்பாக விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்தார்.
The post காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.