×

தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் ரூ.23 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்..!!

தெலங்கானா: தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் ரூ.23 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, சிறப்பு தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவந்த 34.78 கிலோ தங்கம், 43.00 கிலோ வெள்ளி நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து, தங்கம், வெள்ளி நகைகள் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாஜிஸ்டிக் சர்வீஸ் நிறுவனம் மூலம் மும்பையில் இருந்து ஏர் கார்கோ மூலம் நகைகள் கொண்டு வந்தது தெரியவந்தது. ஏர் கார்கோவில் வந்த நகைகளை 2 வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தபோது அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தெலுங்கானாவில் தேர்தல் நேரத்தில் ரூ.23 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் ரூ.23 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Cyberabad, Telangana ,Telangana ,Flying Squad ,Special Special Forces ,
× RELATED பள்ளியில் பெண்ணுடன் ஜாலி ஆசிரியரை இழுத்து வந்து மரத்தில் கட்டி அடி, உதை