×

வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு

வி.கே.புரம், மே 4: வி.கே.புரம் மேலக்கொட்டாரத்தை சேர்ந்தவர் பாலு என்ற பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பலவேசம்மாள், நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டு முற்றத்தில் தண்ணீர் தெளிப்பதற்காக கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது வாசலில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் கதவை திறந்ததும், பாம்பு வீட்டிற்குள் புகுந்து விட்டது. இதனால் அவர், அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து பாபநாசம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரகர் சத்யவேல் உத்தரவின்பேரில் வேட்டை தடுப்பு காவலர்கள் துரை, ராமையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை பாபநாசம் கோயில்தேரி பீட்டில் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

The post வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு appeared first on Dinakaran.

Tags : VKpuram ,Balu ,Balasubramanian ,Melakottaram ,Palavesammal ,
× RELATED கடந்த கால தவறுகளை மோடி அரசு சரி...