காரைக்கால், மே 4: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் சனிஸ்வர பகவான் கோவிலில் பிரணாம்பாள் பெண் யானை உள்ளது. இந்த நிலையில் பிரணாம்பாள் யானையை தினமும் அங்கு உள்ள குளத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் குளிக்க வைக்கப்பட்டு வருகிறது. தற்போது காரைக்கால் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து வருவதால் கோடை வெப்பத்தின் காரணமாக குளத்தில் உள்ள நீர் மிகவும் சூடாக உள்ளது. இதனால் பிரணாம்பாள் யானை தண்ணீர் குழாய் மூலம் குளிக்க வைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவது போல் தண்ணீரை தும்பிக்கையால் எடுத்து அதன் மீது அடித்து விளையாடி மகிழ்ந்தது.இதை போல் பிரணாம்பாள் யானை பாகனோடு நாள்தோறும் குளித்து மகிழ்ந்து வருகிறது. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் வெயிலின் தாக்கத்திலிருந்து மீள குளிர்ச்சி தரும் பழ வகைகள் அதிக அளவில் உண்ண கொடுப்பது என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
The post சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்க பாகனோடு குளித்து மகிழ்ந்த சனீஸ்வரன் கோயில் யானை appeared first on Dinakaran.