×
Saravana Stores

காரைக்கால் என்.ஐ.டியில் மருத்துவ சிக்னல் பகுப்பாய்விற்கான ஏஐ இரண்டு நாள் கருத்தரங்கம்

காரைக்கால், மே 4: காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பு துறையின் சார்பாக “மருத்துவ சிக்னல் பகுப்பாய்விற்கான விளக்கக்கூடிய ஏஐ என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கமானது கல்லூரியில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் வளாகத்தில் நேற்று தொடங்கியது. இக்கருத்தரங்கிற்கு அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் நிதியுதவி அளித்துள்ளது. இக்கருத்தரங்கினை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி முனைவர்.மேனகா முருகேசன்,கழகத்தின் இயக்குனர் (பொறுப்பு) முனைவர். உஷா நடேசன்,கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ.சுந்தரவரதன் மற்றும் முனைவர். ஜி எஸ் மஹாபத்ரா, டீன் (ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை) முன்னிலையில் தொடங்கி வைத்தார். இக்கருத்தரங்கில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 93 பங்கேற்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இக்கருத்தரங்கில் பங்கேற்பாளர்களுக்கு ஆழ்ந்த கற்றல், சிக்னல் செயலாக்கம், இயந்திர கற்றல் மற்றும் மருத்துவப் படங்கள் மற்றும் சிக்னல்களில் இருந்து நோயறிதல் தகவல்களை கண்டறிதல் போன்ற பல்வேறு தகவல்கள் துறை வல்லூநர்களால் கற்பிக்கப்பட உள்ளது. இக்கருத்தரங்கின் ஏற்பாடுகள் அனைத்தும் கழகத்தின் உதவி பேராசிரியரும் இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர்.மலய குமார் நாத் துறை உறுப்பினர்கள் உதவியுடன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

The post காரைக்கால் என்.ஐ.டியில் மருத்துவ சிக்னல் பகுப்பாய்விற்கான ஏஐ இரண்டு நாள் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Diil ,Department of Electronics and Communications ,Puducherry National Technological University ,Vikram Sarabai ,Dinakaran ,
× RELATED காரைக்கால் கலெக்டர் அலுவலகத்துக்கு...