போடி, மே 4: போடி அருகே சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேனி மாவட்டம், போடி-தேவாரம் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் புதிதாக தார்ச்சாலை அமைத்து சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலையில் உள்ள ஒவ்வொரு கிராமங்களின் நுழைவாயிலிலும், முக்கிய சந்திப்புகளிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பதை அறியாமல் வேகமாக வரும் வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகும் நிலையை தடுக்க, வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
The post போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு appeared first on Dinakaran.