×

கோடை கால பயிற்சி முகாம்

 

சிவகங்கை, மே 4: சிவகங்கை கால்பந்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் கோடைவிடுமுறையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி மற்றும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த ஏப்25ல் தொடங்கி மே 5 வரை பயிற்சி நடைபெறுகிறது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி நடைபெறுகிறது.

இதில் 90 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். இதுகுறித்து சிவகங்கை கால்பந்துக்கழக செயலர் மற்றும் பயிற்றுனர் சிக்கந்தர் கூறியதாவது: கால்பந்து விளையாட்டை, கடந்த 19 ஆண்டுகளாக சிவகங்கை கால்பந்துக்கழகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுத்து வருகிறோம். மேலும் விருப்பமுள்ள 5 வயது முதல் 17 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள் பயிற்சி பெறலாம், என தெரிவித்தார்.

The post கோடை கால பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Football Association ,Sivaganga King High School ,District Sports Ground ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பகுதிக்கு நிலையான...