×

தனித்து போட்டியா? தலைதெறிக்க ஓடும் முரசு தொண்டர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இப்பவே களைகட்டிட்டு போல.. ஆனா, ஒரு கட்சில மட்டும் தனித்து போட்டின்னதும் தல தெறிக்க நிர்வாகிகள் ஓடுறாங்களாமே’என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘அந்த கட்சி புலம்பல் உன் காது வரைக்கும் கேட்டிருச்சா?’ என்று கேள்வி கேட்டபடியே ஆரம்பித்தார் விக்கியானந்தா’‘‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவிச்சிருக்காங்களாம். இந்த அறிவிப்பை கேட்டு நகர செயலாளர்கள் பலரும்  இப்பவே ஓட்டம் பிடிக்கத் தொடங்கி இருக்காங்களாம்.. புரம் கொண்ட மாவட்ட தலைநகரில் உள்ள சபரிமலைசாமி பெயரைக்கொண்டவர், வெளிப்படையாகவே புலம்பி வர்றாராம். போன முறை தனித்துப்போட்டியினு நிக்கவைத்து 20, 30 லட்சம் வரை செலவு வச்சிட்டாங்க. இப்பவேற தனித்து போட்டியினு அறிவிச்சு செலவு வைக்கப்போறாங்க. இப்படியே செலவு செய்து நாங்கள் இழந்ததெல்லாம் போதும். இந்த முறை ஒருத்தன்கூட விருப்ப மனு வாங்க வரமாட்டான். தனித்து போட்டியிடுவதற்கு பதிலா, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பு என்று அறிவித்து விட்டுப்போயிருக்கலாம். நாங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்திருப்போம் என்று சக கட்சியினரிடம் புலம்பி தீர்த்து வர்றாராம்’ என்றார் விக்கியானந்தா.‘மாங்கனி மாவட்டத்துல இருக்கிற மாம்பழ கட்சி எம்எல்ஏக்களையும், அவர்களால் ஏற்படும் சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது போல’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘ஓ யுனிவர்சிட்டில வம்பிழுத்த விவகாரம் வெளியே தெரிந்துவிட்டதா’ என்று பதில் கேள்வி கேட்டார் விக்கியானந்தா.‘மாங்கனி மாவட்டத்துல யுனிவர்சிட்டி பட்டமளிப்பு விழாவுக்கு ஜோடியா வந்த எம்எல்ஏக்கள் புதுசா ஒரு சர்ச்சைய கிளப்பியிருக்காங்க. வழக்கமா யுனிவர்சிட்டி விழாவுல கலந்துக்க வரும் சிறப்பு அழைப்பாளர்கள அணிவகுப்பா  மேடைக்கு கூட்டிட்டு போறதை மரபா கடைபிடிச்சிட்டு வராங்க. அந்த சமயத்துல எல்லாரும் எழுந்து நிற்பதை தவிர, வேறு எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. ஆனா, அணை இருக்கும் ஊரோட மாம்பழ எம்எல்ஏ, அணிவகுப்பு நடந்திட்டு இருக்கும் போதே, விருந்தினரா வந்த மினிஸ்டர் கிட்ட திடீர்னு மனு கொடுக்கப் போனாரு. அதேசமயம், அங்கிருந்த யுனிவர்சிட்டி அதிகாரிங்க இப்போ கொடுக்குறது மரபு இல்லன்னு தடுத்துருக்காங்க. இதனால ஆவேசமான எம்எல்ஏ, என்னை எப்படி மனு கொடுக்க விடாம தடுக்கலாம்னு, வான்ட்டடா வம்பிழுத்திருக்காரு. யுனிவர்சிட்டி மரப மீறக் கூடாதுன்னு எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேட்காதவரு, முக்கிய அதிகாரிகள ஒருமையிலும் பேச ஆரம்பிச்சிருக்காரு. நிலமை கைமீறிப் போவத  புரிஞ்சுக்கிட்ட மினிஸ்டர், ஒரு வழியா இரு தரப்பையும் சமாதானம் செஞ்சு அனுப்பி வச்சாராம்’ என்றார் விக்கியானந்தா. ‘ஆட்சி மாறினாலும், காட்சி மாறாமல் கல்லா கட்டும் மதுத்துறை அதிகாரி பற்றி தெரியுமா?’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ஹனிபீ மாவட்டத்துக்காரரின் இலைக்கட்சி  விசுவாசி பற்றி தானே என்று சிரித்தார் விக்கியானந்தா.‘‘பூட்டு மாவட்டத்தின் மதுத்துறை அதிகாரியாக கேரளத்து தெய்வத்தின் பெயர் கொண்டவர் இருக்கிறார். ஹனிபீ மாவட்டத்துக்காரரான இவர், இலைக்கட்சியின் விவிஐபியின் சிபாரிசால் இங்கே பணிக்கு வந்தவராம். கரை வேட்டி கட்டாத இலைக் கட்சிக்காரராக இருந்து வரும் இவர் மீது, கடந்த ஆட்சிக் காலத்தில் மது பாட்டில்களை எல்லாம், இலைக்கட்சி நிர்வாகிகளிடம் கொடுத்து விற்கச் செய்து, தன் கணக்கிலும் ஒரு பங்கை கல்லாக் கட்ட வைத்ததாக புகார் இருக்கிறது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சமத்தாக இருப்பது போல் காட்டிக் கொண்டு, இலைக்கட்சி விசுவாசிகளை பணியிட மாற்றம் செய்யாமல் பார்த்துக் கொள்கிறார். மாறுதல் பெற வேண்டிய அவசியத்தேவையில் இருப்பவர்களுக்குக் கூட மாற்றம் தராமல், தனக்கானவர்களில் யாராவது மாற்றம் கேட்டால் உடனடியாக தந்து விடுகிறார். இது ஒருபுறமிருக்க, மதுக்கடைக்கு மாதம் ரூ.15 ஆயிரம் கட்டும்படி கறார் வசூலில் இறங்கி இருப்பதாகவும், இதில் அத்தனை கடைக்காரர்களும் சேர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதத்தை தட்டி விட்டதோடு, மாநில அதிகாரிகளுக்கும் புகார்களை குவித்துள்ளனர். இதன்பேரில் கண்காணிப்பு அதிகரித்திருக்கிறது…’’ என்கிறார் விக்கியானந்தா.‘வேக்சின் கேம்புக்கு போறதா சொல்லிட்டு கிளினிக்கிற்கு போய்டுறாராமே கவர்மென்ட் டாக்டர்’ என்று கேட்டார் பீட்டர் மாமாதமிழகத்துல அனைத்து மாவட்டங்கள்லயும், வாரத்துக்கு 2 முறை கொரோனா ஸ்பெஷல் கேம்ப் நடத்துறாங்க. அதன்படி, கிரிவலம் மாவட்டத்துல கடல் பெயரில் தொடங்கும் கிராமத்தில் உள்ள பிஎச் சென்டரில் பெயரின் முடிவுல 14 வருஷம் வனவாசம் சென்ற கடவுளோட பெயரை கொண்டவரு பணிபுரிஞ்சி வர்றாரு. இவரு வேக்சின் கேம்புக்கு போறதாக சொல்லிட்டு, தன்னோட சொந்த கிளினிக்கிற்கு போய்டுறதாக பப்ளிக் புகார் சொல்றாங்க. வேக்சின் கேம்புக்கு வராத இவரு, கவர்மென்ட் வேலைய விட்டுட்டு, கிளினிக்கையே பார்த்துக்கலாமேன்னு கேள்வி கேட்கதொடங்கியிருக்காங்க’ என்றார் விக்கியானந்தா. …

The post தனித்து போட்டியா? தலைதெறிக்க ஓடும் முரசு தொண்டர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Murasu ,Urban Local Government Election ,
× RELATED 5-வது முறையாக திமுகவின் வெற்றிக்...