×

இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே சென்னையில் மகளிர் டெஸ்ட் ஜூன் 28ல் தொடங்குகிறது

சென்னை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்ரிக்க மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்திலும், டெஸ்ட் போட்டி சென்னையிலும் நடைபெறும். இரு அணிகளும் முதலில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளன (ஜூன் 16, 19, 23). இந்தியா – தென் ஆப்ரிக்கா மகளிர் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி, சென்னை எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் ஜூன் 28ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு டி20 தொடர் நடைபெறும் (ஜூலை 5, 7, 9).

The post இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே சென்னையில் மகளிர் டெஸ்ட் ஜூன் 28ல் தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Women's Test ,India ,South Africa ,Chennai ,women's cricket team ,M. Chinnaswamy Stadium ,Bengaluru ,South Africa Women's Test ,Dinakaran ,
× RELATED இந்தியா-தெ.ஆப்ரிக்கா பெண்கள் தொடர்: இன்று பெங்களூரில் முதல் ஒருநாள்