- சுனில் நரைன்
- ஷாருக்
- புது தில்லி
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- பாலிவுட்
- ஷாரு கான்
- ஐபிஎல்
- கொல்கத்தா
- கேகேஆர்…
- ஷாருக்
- தின மலர்
புதுடெல்லி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ‘சூப்பர் மேன்’ சுனில் நரைன் என்று அந்த அணியின் உரிமையாளரும் பாலிவுட் நட்சத்திரமுமான ஷாருக் கான் பாராட்டி உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேகேஆர் இதுவரை 9 போட்டியில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2வது இடம் வகிக்கிறது. ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான அணியில் அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றிக்கு உதவி வருகின்றனர். குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் சுனில் நரைன் (35 வயது) பங்களிப்பு மிக குக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
தொடக்க வீரராகக் களமிறங்கி எதிரணி பந்துவீச்சை சிதறடிக்கும் அவர், பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு அசத்தி வருகிறார். நரைன் 9 இன்னிங்சில் 372 ரன் குவித்துள்ளதுடன் (அதிகம் 109, சராசரி 41.33, சதம் 1, அரை சதம் 2), அரை டஜன் விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே 2012 மற்றும் 2014ல் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றதில் நரைன் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, அணி உரிமையாளர் ஷாருக் கான் கூறுகையில், ‘நாங்கள் அவரை ‘சூப்பர் மேன்’ என்று தான் அழைக்கிறோம். கடவுளின் துகள் போன்றவர். களத்தில் ‘அனைத்துமாக’ நிரம்பி நிற்கிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், விக்கெட் கீப்பிங் என எந்த பணியை கொடுத்தாலும் 100 சதவீத உழைப்பை கொடுக்கக் கூடியவர். அணியின் நலனுக்காக எதையும் செய்யக் கூடியவர். அவரைப் போன்ற வீரர்கள் இருப்பது கொல்கத்தா அணிக்கு கிடைத்த வரம்’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
The post சூப்பர் மேன் சுனில் நரைன்! ஷாருக் பாராட்டு appeared first on Dinakaran.