×

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

சென்னை: விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தினந்தோறும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தேமுதிக அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் மக்கள் வரிசையாக நின்று பூக்கள் மற்றும் பல்வேறு பூஜை பொருட்களை கொண்டு வழிப்பட்டு வருகின்றனர். அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மதியம் 12 மணியில் இருந்து தொடங்கி இரவு வரை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். மேலும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக இது போற்றப்படுகிறது. நினைவிடத்திற்கு வந்த பொதுமக்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

The post விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது appeared first on Dinakaran.

Tags : Vijayakanth Memorial ,CHENNAI ,DMD ,Vijayakanth ,DMUD ,Coimbatore, Chennai ,Dinakaran ,
× RELATED விருதுநகர் தொகுதியில் மீண்டும்...