×
Saravana Stores

திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி


திருமலை: திருப்பதி-திருமலையில் கொளுத்தும் வெயிலுக்கிடையே காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆந்திர மாநிலத்தில் சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மாநிலத்தில் பல இடங்களில் 110 டிகிரி வெயில் கொளுத்துவதால் அனல் காற்று வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பதி மாவட்டத்தில் நேற்று 109.4 டிகிரி வெயில் சுட்டெரித்து. மதியம் வானிலை திடீரென மாறியது. சித்தூர், திருப்பதி மாவட்டத்தில் மேகமூட்டம் காணப்பட்டது. சிறிது நேரத்தில் காற்றுடன் கோடை மழை பெய்தது.

இதேபோல் திருமலை ஏழுமலையான் கோயில் வளாகத்திலும் கனமழை பெய்தது. சூறாவளி காற்றும் வீசியது. அதுவரை சுட்டெரித்த வெப்பத்தால் திணறிய பக்தர்கள் மழையால் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மழையால் திருமலையில் குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழைக்காரணமாக திருமலையில் உள்ள மாடவீதிகள் உள்பட பல்வேறு சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

The post திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tirupati ,Andhra ,
× RELATED திருப்பதியில் தரிசன டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக குறைப்பு?