×

துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!

மதுரை: துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது. தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகிக்கும்படி இருந்த நாகையைச் சேர்ந்த முகமது அபுபக்கர் என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் முகமது அபுபக்கரிடம் இருந்து 812 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

The post துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Dubai ,Madurai airport ,Madurai ,Mohammad Abu Bakar ,Naga ,Dinakaran ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரி மனைவியின் உடல் மதுரை விமான நிலையம் வந்தது!