×

தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் 29ம் ஆண்டுவிழா

நாகர்கோவில், மே 3: தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் 29-வது ஆண்டு விழா நடந்தது. கல்லூரிப் பாடகர்குழுவின் வாழ்த்து பாடல் மற்றும் கல்லூரிப் போதகர் வி. பால் சுதாகர் ஜெபத்துடன் விழா ஆரம்பமானது. விழாவில் குமரிப் பேராய எளியோர் நல்வாழ்வு துறையின் இயக்குனர் லாரன்ஸ் தலைமை வகித்தார். காலையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் காவல்துறைத் தலைவர் மற்றும் இந்திய கைப்பந்து சங்க தலைவர் முனைவர். ராமசுப்ரமணி, ஐ.பி.எஸ், பங்கு பெற்று, உயர்வான உன்னதமான குறிக்கோளோடு தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் உழைக்க வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார். முன்னதாக விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஷெர்லி கனக பிரியா வரவேற்று பேசினார். கல்லுாரி முதல்வர் முனைவர் ஸ்பென்சர் பிரதாப் சிங் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரித் தாளாளர் முனைவர்.

எபனேசர் ஜோசப் மற்றும் காசாளர் பொன் சாலமோன் வாழ்த்துரை அளித்தனர். மேலும், கல்வி, கலை, மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இறுதியாண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பயிலும் மாணவி ரெஜிலின் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் முனைவர் ஸ்பென்சர் பிரதாப் சிங், விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் ஷெர்லி கனக பிரியா ஆகியோர் செய்திருந்தனர். இந்த விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் 29ம் ஆண்டுவிழா appeared first on Dinakaran.

Tags : Dovala CSI ,College of ,Nagercoil ,Thovala CSI ,College of Engineering ,V. ,Bal Sudhakar ,Kumari Archdiocese of Poor People's Welfare Department ,Dhovalai ,CSI 29th Anniversary of Engineering ,Dinakaran ,
× RELATED கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி...