×

கோடைகாலம் என்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் பொதுமக்களுக்கு முசிறி நகராட்சி வேண்டுகோள்

முசிறி, மே 3: முசிறி நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு காவேரி ஆறு நீர் உறிஞ்சும் கிணறு மூலம் குடிநீர் பெறப்பட்டு, பொது மக்களுக்கு தினசரி குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்கள் தேவைக்கேற்ப குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம், முசிறி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணை யர் கிருஷ்ணவேணி அறிவித்துள்ளார்.

The post கோடைகாலம் என்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் பொதுமக்களுக்கு முசிறி நகராட்சி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Musiri Municipality ,Musiri ,Municipal Commissioner ,Krishnaveni ,Trichy District ,Musiri Municipalities ,Kaveri ,
× RELATED முசிறி, தொட்டியத்தில் நியாய விலை கடையில் குறைதீர் முகாம்