×

ஒவ்வொரு ஊராட்சியிலும் 4 நாள் மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி, மே 3: ஒவ்வொரு ஊராட்சியிலும் 4 நாள் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதை ஆடு வளர்ப்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ருத்துவர் சந்திரன் கேட்டு கொண்டுள்ளார். திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம வாரியாக ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் தமிழ்நாடு அரசு கால்நடை பாரமரிப்புத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் சாரு உத்தரவின்பேரில் மண்டல இணை இயக்குனர், உதவி இயக்குனர் ஆலோசனைப்படி நடைபெற்று வருகிறது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீரக்களூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட பூசலாங்குடி ஊராட்சியில் கால்நடை மருத்துவர் சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 200 ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போட்டனர். கடியாச்சேரி கால்நடை மருந்தகத்திற்க்கு உட்ப்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் டாக்டர் காவியா தலைமையிலான மருத்துவ குழுவினர் 200 ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போட்டனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் நான்கு நாள் முகாம் நடைபெறும். இதனை ஆடு வளர்ப்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.

The post ஒவ்வொரு ஊராட்சியிலும் 4 நாள் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Rudhuvar Chandran ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் தலைவர்களின்...