×
Saravana Stores

கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம்..!!

திருவாரூர்: டெல்டா பாசத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி சிபிஐ கட்சி எம்எல்ஏ மாரிமுத்து தலைமையில் 500 மேற்பட்டோர் பட்டுகோட்டை ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

The post கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka government ,Tiruvarur ,Delta Basam ,Tamil Nadu Farmers Union ,Mannargudi ,Thirutharapoondi ,station ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில்...