×

தினமும் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் தொண்டியக்காடு அரசு பள்ளி தலைமையாசிரியர் பணி ஓய்வு பாராட்டு விழா

முத்துப்பேட்டை, மே2: முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றியவர் மனோகரன். இவர் பணி ஓய்வுபெறுவதை முன்னிட்டு பள்ளியில் பாராட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை.உத்திராபதி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆசிரியர் செல்வராசு முன்னிலை வகித்தார். இதில் தமிழாசிரியர் சாந்தி மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிராம மக்கள் உட்பட பலரும் வாழ்த்தி பேசி பாராட்டு தெரிவித்தனர். பின்னர் தலைமையாசிரியருக்கு சிறப்பு செய்தனர். தொடர்ந்து பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தான் பணியாற்றிய காலங்களில் நடந்த இனிமையான நிகழ்வுகள் பற்றி எடுத்துக்கூறி தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உருக்கமாக பேசினார். முடிவில் ஆசிரியர் வினோதினி நன்றி கூறினார்.

The post தினமும் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் தொண்டியக்காடு அரசு பள்ளி தலைமையாசிரியர் பணி ஓய்வு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Tondiakadu Government School ,Principal's Retirement Appreciation Ceremony ,Muthuppet ,Manokaran ,Thondiakadu Government High School ,Muthupet ,Parent Teacher Association ,President ,Durai.Uthrapati. ,Teacher ,Selvarasu ,Retirement Appreciation Ceremony ,Dinakaran ,
× RELATED தண்ணீர் நிரம்பி இருப்பதால்...