×

மரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

 

பாலக்காடு, மே 3: நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதி காட்டுப்பகுதியில் மலை தேன் சேகரிக்க சென்ற ஆதிவாசி வாலிபர் மரத்திலிருந்து கீழே விழுந்து பலியானார். பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதி கிராமப்பஞ்சாயத்து பகுதியான புல்லுக்காடு ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (30). இவரது மனைவி கனகா (25). இவர்கள் இருவரும் மலை தேன் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதன்மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கடந்த 30ம் தேதி இரவு தேன் கேசரிக்கப்பதற்காக சுரேஷ் காட்டிற்குள் சென்றார். அங்கு மரத்தில் ஏறி தேன் சேகரித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு நெம்மாரா சாமூகிய சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நெல்லியாம்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Nelliampathi ,Nemmara ,Suresh ,Bullukkadu Adivasi Colony ,Palakkad District ,Nelliampati Village Panchayat ,Dinakaran ,
× RELATED பாலக்காடு அருகே சில்லிக் கொம்பன் யானை முகாம்: தோட்ட தொழிலாளர்கள் அச்சம்