×

கொங்கலம்மன் கோயில் கடைகளுக்கு ரூ.4.70 கோடி வாடகை பாக்கி

 

ஈரோடு, மே 3: ஈரோடு மாநகரி மையப்பகுதியில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக கொங்கலம்மன் கோயில் வீதி பகுதியில் 46 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் வாடகை மூலம் கோயில் பராமரிப்பு மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் போன்றவை அறநிலையத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், கோயில் கடைகளை வாடகைக்கு எடுத்த ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலானவர்கள் வாடகை செலுத்தவில்லை. இதனால், கோயில் செயல் அலுவலர் மற்றும் கோயில் பணியாளர்கள் சார்பில் கடந்த 3 மாதமாக வாடகை நிலுவை தொகை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கினர்.

மேலும், வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர், விவரம் போன்றவற்றையும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பெரிய அளவிலான பிளக்ஸ் பேனரும் வைத்துள்ளனர். இதில், 46 கடை ஒப்பந்ததாரர்களில், 7 ஒப்பந்ததாரர்கள் தங்களது வாடகை நிலுவை தொகைகளை செலுத்தி உள்ளனர். மீதமுள்ள 39 கடை ஒப்பந்ததாரர்கள் ரூ.4 கோடியே 70 லட்சம் வாடகை செலுத்தாமல், பாக்கி வைத்துள்ளனர். இத்தொகைகளை வசூலிக்க அறநிலையத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கொங்கலம்மன் கோயில் கடைகளுக்கு ரூ.4.70 கோடி வாடகை பாக்கி appeared first on Dinakaran.

Tags : Kongalamman ,Erode ,Kongalammam Temple ,Hindu Religious Endowment Department ,Kongalamman Koil Road ,Kongalamman Temple ,
× RELATED கொங்கலம்மன் கோயில் வீதியில் புகையிலை...