×

முடி ஒரு பாதுகாப்பு கோடை காலத்தில் மொட்டை அடிக்க கூடாது: மருத்துவர் தேரணிராஜன் அறிவுறுத்தல்

சென்னை: கோடை காலத்தில் மொட்டை அடிக்க கூடாது, முடி ஒரு பாதுகாப்பு என ராஜிவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. வரும் காலங்களில் காலை 12 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறியவர்கள், பெரியவர்கள், நோயாளிகள் என யாரும் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ராஜிவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகையில், வெப்பத்தால் பாதிக்கப்பட்டு இது வரை யாரும் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனைகளில் அனைத்து இடங்களிலும் ஹீட் ஸ்ட்ரோக் , ஹீட் கிராம்ப் குறித்தும் ஹீட் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிவது, பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட தகவலுடன் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல் வைத்து இருக்கிறோம். பாதிக்கப்பட்டு யாரேனும் வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஈரத்துணி, ஐஸ் பாக் உள்ளிட்டவை தயாராக உள்ளது. கோடை காலத்தில் மொட்டை அடிக்க கூடாது, முடி ஒரு பாதுகாப்பு.

குறிப்பாக வெளியில் செல்லும் போது கண்ணாடி, தொப்பி, முழு கை சட்டை அணியலாம். முக்கியமாக தண்ணீர் குடிக்க வேண்டும். 11.30 முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தடுக்க வேண்டும். மேலும் சாலை ஓரத்தில் உள்ள ஜூஸ் வகைகளை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குபதிலாக தண்ணீர், ஓஆர் எஸ் கரைசல், வீட்டில் செய்யப்பட்ட ஜூஸ் குடிக்கலாம். மேலும் வெயிலில் இருக்கும் போது மயக்க நிலை, நெஞ்சு படபடப்பு, அதிக வியர்வை இருந்தால் உடனடியாக தலையில் தண்ணீர் ஊற்றிக்கொள்ளலாம். அதிக வியர்வை வெளியேறும் போது குளிக்க வேண்டும், இல்லை என்றால் அந்த வியர்வை உடல்மேல் காய்ந்து விடும். இதனால் தொடர்ந்து வியர்வை வெளியில் வராமல் உள்ளேயே தங்கிவிடுகிறது. வெப்பம் உடலில் இருந்து வெளியேற முடியாததால் தான் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. எனவே குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் பாதுகாப்பாக வெயிலில் வராமல் இருக்க வேண்டும் என்றார்.

The post முடி ஒரு பாதுகாப்பு கோடை காலத்தில் மொட்டை அடிக்க கூடாது: மருத்துவர் தேரணிராஜன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Theranirajan ,Chennai ,Rajiv Gandhi Hospital ,Teranirajan ,Tamil Nadu ,Terranirajan ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது..!!