×
Saravana Stores

மணிப்பூரில் இனக்கலவரம் இன்று ஓராண்டு நிறைவு

இம்பால்: பாஜ ஆட்சி செய்து வரும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டீஸ் இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க சிறுபான்மையாக வசிக்கும் நாகா, குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி இருசமூகத்தினரும் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.

இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த 50,000க்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். அங்கு இயல்பு நிலை திரும்பி விட்டதாக ஒன்றிய அரசு கூறினாலும், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மெய்டீஸ் ஆதிக்கம் செலுத்தும் பிஷ்ணுபூர் பகுதிக்கும், குக்கி ஆதிக்கம் நிறைந்த சுராசந்த்பூருக்கும் இடையே உள்ள இம்பால் இனக்கலவரத்துக்கு முன்பு வரை இரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியாக இருந்தது.

தற்போது அங்கு குக்கி இன மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தால் சிலர் அண்டை நாடான அசாமுக்கும், மிசோரமுக்கும் குடிபெயர்ந்து விட்டனர். இதுபோன்ற சூழலில் தாயை அல்லது தந்தையை பிரிந்து வாழும் குழந்தைகள் தங்கள் பெற்றோர் இருவருடனும் சேர்ந்து வாழ முடியாத சோகம் ஏற்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் இனக்கலவரம் இன்று ஓராண்டு நிறைவு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Naga ,northeastern ,BJP ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்