×

முடிவின்றி நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல் காசாவில் வீடுகளை சீரமைக்க 16 ஆண்டுகள் ஆகும்: ஐ.நா. அறிக்கை

ஜெருசலேம்: இஸ்ரேல் போரால் காசாவில் சீர்குலைந்த வீடுகளை சீரமைக்க 16 ஆண்டுகள் ஆகும் என ஐக்கியு நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் 7 மாதங்களை கடந்தும் முடிவின்றி நீடிக்கிறது. இந்த போரில் இருதரப்பிலும் ஏராளமானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் 34,000க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு விட்டனர்.

இஸ்ரேலின் மும்முனை தாக்குதலில் காசாவின் வடக்கு, தெற்கு பகுதிகளில் உள்ள வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களும் சிதிலமடைந்து விட்டன. லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் சொந்த இடங்களை விட்டு வௌியேறி விட்டனர். இந்நிலையில் ஐநா வௌியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலின் தரைவழி, வான்வழி தாக்குதல்களில் கடந்த ஏழு மாதங்களில் காசா நகரில் ஏராளமான குடியிருப்புகள் சிதைந்து விட்டன. இந்த வீடுகள் அனைத்தையும் கட்டி முடித்து, மீண்டும் மக்கள் குடியேற 2040ம் ஆண்டு வரை ஆகலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முடிவின்றி நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல் காசாவில் வீடுகளை சீரமைக்க 16 ஆண்டுகள் ஆகும்: ஐ.நா. அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Endless Israeli offensive ,UN ,JERUSALEM ,United Nations ,Israel ,Gaza ,Hamas ,Dinakaran ,
× RELATED “தலையை துண்டித்து, உடல் உறுப்புகளை...