×

வெயில் கொடுமையால் கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு 6ம் தேதி வரை விடுமுறை

திருவனந்தபுரம்: கேரளாவில் வெயில் கொடுமை அதிகரித்து வருவதால் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை தொழில்முறை கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இவ்வருடம் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று திருவனந்தபுரத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையை சமாளிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: தொழில்முறை கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும். பள்ளிகளில் கோடைகால வகுப்புகளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடத்தக்கூடாது.

போலீஸ், தீயணைப்புத் துறை, என்சிசி உள்பட துறைகளில் பகல் நேர அணிவகுப்பு மற்றும் பயிற்சிகளை நடத்தக்கூடாது. ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் டின் ஷீட்டுகளால் மேற்கூரை அமைக்கப்பட்ட தொழில் நிறுவனங்களை பகல் நேரங்களில் மூட வேண்டும். காலை 11 மணி வரை பிற்பகல் 3 மணி வரை உடலில் நேரடியாக வெயில் படும் வகையில் தொழிலாளர்கள் யாரும் வேலை செய்யக்கூடாது. இவ்வாறு இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

The post வெயில் கொடுமையால் கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு 6ம் தேதி வரை விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...